மகாத்மா காந்தி நூல் நிலையத்தைத் தொடங்கிய கு.மகாலிங்கம் கடந்த வாரம் இயற்கை எய்தினார். தொண்ணூற்று ஐந்து வயதான இவர், எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னை சைதாப்பேட்டையில் காந்தி நூலகத்தை நிர்வகித்து நடத்தியவர். கைத்தறி ஆடைகளை மட்டுமே அணிந்தவர். செருப்பு அணியாதவர், செல்ஃபோன் பயன்படுத்தாதவர். முடிந்தவரை நடந்தே செல்வது, தூரப். பயணங்களுக்கு மட்டும் பேருந்து என எளிமையின் உருவமாக, இறுதிவரை காந்தியக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்.
எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, நூல் நிலைய வருகைப் பதிவேட்டில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்:
‘காந்தியாரைப் பார்க்க வேண்டுமென்றால் சைதாப்பேட்டை மகாத்மா காந்தி நூல் நிலையம் சென்று மகாலிங்கத்தைப் பாருங்கள்.’















Add Comment