ஆசியாவின் மிகப் பிரபல அரசியல்வாதிகளில் ஒருவரும், மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹீம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஆறு மாதங்களாகின்றன. 2023-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியா ஏழு சதவீதப் பொருளாதார வளர்ச்சியுடன் கெத்தாய் எழுந்து நிற்கிறது. கொவிட் தந்த துயரங்களையும், 2020 – 2022 காலத்தில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மைகளையும் களைந்துவிட்டு மீண்டும் ஒரு ஓட்டம் ஓடிப் பார்க்கத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வருகிறது.
மலேசியாவை சர்வதேசப் பொருளாதார வெளியில் முன்னாள் பிரதமர் மஹாதீர் மொஹமட் தூக்கி நிறுத்திய போது துணைப் பிரதமராகவும், நிதியமைச்சராகவும், மஹாதீருக்கு எல்லாமாகவும் இருந்த அன்வர் இப்ராஹீமுக்கு பொருளாதாரச் சீர்திருத்தங்களும், அரச நிர்வாகமும் ஒரு பொருட்டே அல்ல. பிரதமருக்கு மேலதிகமாய்த் தேசத்தின் நிதியமைச்சரும் அவர்தான். ஆனால் அன்வர் இப்போது எதிர்கொள்வது வேறுவிதமான ஒரு சவாலை. கத்தி மேல் நடக்கும் கதை என்று தமிழ் சினிமா விமர்சகர்கள் எழுதுவார்களே. அப்படி ஒன்றை..
Add Comment