Home » மாலத்தீவு தேர்தல்: வெல்ல வேண்டிய சூதாட்டம்
உலகம்

மாலத்தீவு தேர்தல்: வெல்ல வேண்டிய சூதாட்டம்

முயிஸு - இப்ராஹீம் சோலி

அகில உலக சுற்றுலாப் பிரியர்களின் முதல் தேர்வுகளில் ஒன்றாய் எப்போதும் இருக்கும் மாலத்தீவு தேசம், தேர்தல் பரபரப்புகளால் சுழன்றபடி நிற்கிறது. செப்டம்பர் 9ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது சதவீத ஓட்டுக்களைப் பெறவில்லை. நாற்பத்தாறு சதவீத ஓட்டுக்களுடன் முன்னணியில் திகழும் மாலே நகர மேயரும் எதிர்க்கட்சி வேட்பாளருமான மொஹமட் முயிஸுவுக்கும், முப்பத்தொன்பது சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் அதிபர் இப்ராஹீம் சோலிக்குமிடையிலான மறு தேர்தல் செப்டம்பர் 30ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த சதவீதக் கணக்குகளைத் துருவி ஆராய்ந்தால் ஒன்றுமே இல்லை. மாலைநேர மவுண்ட் ரோட் ட்ராபிக் சிக்னலை க்ராஸ் செய்யும் வாகனாதிகளை விடக் குறைவானது மொத்த எண்ணிக்கை. முயிஸு பெற்றிருப்பது வெறும் ஒரு லட்சத்து சொச்ச ஓட்டுக்கள். அதிபர் பெற்றிருப்பதோ எண்பத்தாறாயிரம் ஓட்டுக்கள். வெறும் ஐந்தரை லட்சம் மக்கள் தொகை கொண்ட இத்தீவுக் கூட்டத்தில் எட்டு வேட்பாளர்கள் போட்டியிட்டதே இத்தேர்தலில் ஆடம்பரம் தான்.

மாலத்தீவுத் தேர்தல் ஆசியப் பிராந்தியத்தில் இம்முறை இத்தனை முக்கியத்துவம் பெறக் காரணமிருக்கிறது. 2020-ம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் சந்தைப்படுத்திய ‘இந்திய எதிர்ப்பு’ ஒரு கொடிய கிருமிபோலச் சமூகவலைதளங்கள் எங்கும் நிரம்பி இருந்தது. ‘எம் தேசம் இந்தியாவின் காலனியாகப் போகிறது. இந்திய ராணுவம் பெட்டி படுக்கையோடு வந்து முகாமிடப் போகிறது. ஆகவே அன்புள்ள மக்களே! இந்த அந்நிய சக்தியைத் துரத்தியடிக்க ஒன்றிணையுங்கள். தேசியவாதத்தைத் தழுவிக் கொள்ளுங்கள்’. இப்படித்தான் பிரசாரப் பீரங்கிகள் கதறின. அதிபர் இப்ராஹீம் சோலியோ தன்னால் முடிந்தவரை ‘அப்படி ஒன்றுமே இல்லை’ என்று அலறிப் பார்த்தார். மறுப்புத் தெரிவிக்கிறேன் பேர்வழி என்று மாலத்தீவில் இருக்கும் இந்தியத் தூதரகமோ அறிக்கை மேல் அறிக்கையாய் அடித்துக் காகிதங்களை விரயம் செய்து தள்ளியது ஆனால் எதுவுமே சரிப்பட்டு வரவில்லை.சீனாவைப் பகிரங்கமாய் ஆதரிக்கும் முயிஸுவின் வாய்தான் ஓங்கியது. விளைவு அதிபரைவிட ஏழு சதவீத ஓட்டுக்களை அமோகமாய் அள்ளி இருக்கிறார்..

ஆகவே மாலத்தீவில் நடந்து கொண்டிருக்கும் தேர்தல், வெறும் தலைகளை மாற்றும் மற்றொரு தேர்தலாய் அல்லாமல் இந்தியாவுடன் வாழ்வதா, சீனாவுடன் குலாவுவதா என்று மக்களின் அபிப்பிராயத்தைக் கோரும் சர்வஜன வாக்கெடுப்பாக நோக்கப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!