பரபரப்பான மைசூரு ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது யாதவகிரி. ஆனால், அதற்குள் இன்னோர் உலகத்துக்கு நுழைந்துவிட்டாற்போல் முற்றிலும் மாறுபட்ட, அமைதியான சூழல். மேலேறிக் கீழிறங்கும் அகன்ற தெருக்களில் ஆள் நடமாட்டமில்லை. பெரும்பாலும் தனித்தனி வீடுகள். அவற்றின் அமைப்பு நம்மை அரை நூற்றாண்டு பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடுகிறது.
‘ஆர். கே. நாராயண் வீடு’ என்று கூகுள் மேப்ஸ் காட்டுகிற இடத்தில்தான் டாக்ஸிகாரர் எங்களை இறக்கிவிட்டார். ஆனால், அங்கு அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சுற்றி நடந்து பார்த்தோம், ஒன்றும் புரியவில்லை.
‘யாரிடமாவது விசாரிக்கலாம்’ என்றார் என் மனைவி.
‘எழுத்தாளர் வீடு. அதுவும் முன்பு எப்போதோ இந்தப் பகுதியில் வாழ்ந்த எழுத்தாளருடைய வீடு. அதெல்லாம் யாருக்குத் தெரியப்போகிறது?’ என்று நான் நம்பிக்கையில்லாமல் சொல்வதற்குள் என் மனைவி ஒரு வீட்டின் காவல்காரரை நோக்கி நடந்துகொண்டிருந்தார், ‘சார், இங்க ஆர். கே. நாராயண் வீட்டுக்கு எப்படிப் போகணும்?’














கல்லூரி நாட்களில் நான் முதலில் வாசித்த ஆங்கில நாவல் மால்குடிடேஸ். மாணவர்கள் அனைவரும் தவறாது ஆ.கே புத்தகங்களை படிக்க வேண்டும்.