Home » லாயரம்மா!
இந்தியா

லாயரம்மா!

மம்தா பானர்ஜி

வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா உள்பட ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களுடன் சேர்த்து, பன்னிரண்டு மாநிலங்களில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை (SIR) இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியில் உள்ள குறைபாடுகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடமும் மத்திய அரசிடமும் மாநில அரசுகள் முறையிட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்கு எதிராக மேற்கு வங்க மாநில அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

‘வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்துத் தேர்தல் ஆணையத்துக்கு ஆறு கடிதங்கள் எழுதியுள்ளோம், இதுவரை எங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!