Home » மணி கட்ட இயலாத ஊர்
இந்தியா

மணி கட்ட இயலாத ஊர்

பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய மணிப்பூர் கலவரங்கள் அடங்குவதும் திரும்பத் தொடங்குவதுமென இருக்கிறது. மணிப்பூருக்கு எப்போதும் விடிவில்லை என்பதை ஒவ்வொரு நாளும் அங்கு நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கிடையே மோதல் ஆரம்பமானது. மெய்தி இன மக்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தக் கோரிக்கையைக் குக்கி இன மக்கள் எதிர்த்தனர். இதற்காகக் குக்கி இன மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் கலவரம் உருவானது. அதைத் தொடர்ந்து இரண்டு இனத்தவருக்கும் இடையில் தொடர் வன்முறை வெடித்தது. மாநிலம் முழுவதும் பரவிய வன்முறையில் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அறுபதாயிரத்துக்கும் அதிகமானோர் மணிப்பூரை விட்டு இடம்பெயரும் சூழல் உருவானது. பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு தெருக்களில் அழைத்துச் செல்லப்பட்ட காணொளிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி AFSPA என்னும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூர் முழுவதும் நீட்டித்தது மத்திய அரசு. அதில் சில இடங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இம்பால் மாவட்டத்தில் சேக்மாய், லாம்சங், லாம்லை, ஜிரிபாம் மாவட்டத்தில் ஜிரிபாம், காங்போக்பியில் லீமாங்கோங் மற்றும் பிஷ்னுபூரில் மோய்ராங் ஆகிய ஆறு காவல் நிலையப் பகுதிகளில் இனக் கலவரங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்போது கலவரம் அதிகமாக நடக்கும் இந்த ஆறு காவல் நிலைய எல்லைகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மீண்டும் அமலாகியுள்ளது. இந்தச் சிறப்பு சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பத்தொன்பது இடங்களில் இந்த ஆறு இடங்களும் அடக்கம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!