விடுதலைக்கும் அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும்..? விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி எடையற்றதாக்க எதையெல்லாம் வாழ்வில் எடுத்து வைக்கப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது சுவாரஸ்யம். ஏனெனில் வாழ்விலிருந்து ஒன்றை அவ்வளவு இலகுவில் இறக்கிவைக்க முடியாது என்று நினைக்கின்றேன். ஒரு விடுதலையுணர்விற்காகவும் அமைதிக்காகவும் சில கேளிக்கைகளுக்காகவும் வாழ்வில் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் பயணங்கள்கூட அதற்கானவை தான்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment