மெஸ்ஸியின் வருகையில் என்ன எதிர்பார்க்கப்பட்டதோ, அதற்கு முற்றிலும் மாறான பிம்பம் இந்தியாவைப் பற்றி இணையத்தில் பரவத் தொடங்கிவிட்டது. ஹைதராபாத், மும்பை நிகழ்வுகளில் கொல்கத்தா அளவுக்குப் பிரச்சனைகள் இல்லை. ஆனால் கால்பந்துக்கு அவை நியாயம் சேர்த்ததா என்பது கேள்விக்குறியே. உண்மையில் இச்சிக்கல்களுக்கு யார் காரணம்?
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சதத்ரு தத்தா, கால்பந்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவர். கால்பந்துப் பிரபலங்களை இந்தியாவுக்கு வரச்செய்து, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது அவரது முக்கியத் தொழில். ஏற்கெனவே பீலே, மாரடோனா, ரொனால்டினோ போன்ற பிரபலங்களை கொல்கத்தாவுக்கு வரவழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, மெஸ்ஸி மற்றும் அவருடன் இன்டர் மியாமி அணியில் ஆடும் ஸ்வாரஸ், டி-பால் ஆகியோரையும் இங்கு வரச் செய்தார். முதலில் கொல்கத்தா, மும்பை, டெல்லியில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கடைசி நேரத்தில் ஹைதராபாத்தும் சேர்க்கப்பட்டது.















Well explained