இந்தியா அல்லது இந்தோனேசியா போல மிகப் பெரிய ஜனநாயகம் என்று கொண்டாடப்படும் தேர்தல் இல்லை மெக்சிகோ தேர்தல். ஆனால் இது ஒரு முக்கிய தேர்தல். ஆண்கள் அதிபர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் பரபரப்புகளில் சப்தமே இல்லாமல் ஆளும் கட்சி எதிர்க் கட்சி இரண்டுமே பெண் வேட்பாளர்களை அதிபர் தேர்தலுக்குக் களம் காண வைத்திருக்கிறது.
ஆம், கிளாடியா ஷெயின்பாம் (Claudia Sheinbaum)க்கும் க்ஸோட்டில் கால்வாசிக்கும் ( Mexicans will Xóchitl Gálvez ,Pri Pan Prd) நடந்த போட்டியில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று கிளாடியா ஷெயின்பாம் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மோவிமெண்டோ சியோடனே கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் ஆவரசெஸும் போட்டியிட்டார் (Jorge Álvarez Máynez ,Movimiento Ciudadano party). மும்முனைத் தேர்தலில் 58%க்கும் மேலான வாக்குகளைப் பெற்றார், கிளாடியா.
அதிபர் தேர்தலைத் தவிர, 70 ஆயிரம் வேட்பாளர்கள், 20 ஆயிரம் காலியான இடங்களுக்குப் போட்டியிட்ட மிகப் பெரிய தேர்தல் இது. பல செனேட் உறுப்பினர் பதவிகள் முதல் ஆளுநர், மேயர் பதவிகள் வரை இந்தத் தேர்தல் களம் கண்டது. தண்ணீர்ப் பற்றாக்குறையால் பஞ்சம், வன்முறையும் ஒருபக்கம் இருக்க, இன்னொரு புறம் அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்கா வந்துசேர அதனால் போதிய பாதுகாப்பின்மையால் வரும் பிரச்சினைகள், போதைப் பொருட்கள் பிரச்சினை பிறிதொருபுறம் என மெக்சிகோ ஒரு பிரச்சினை சூழ் தேசம்.
Add Comment