இத்தாலியின் பிரதமர் மெலோனிக்கு இந்தியப் பிரதமர் மோடி, ‘மெலோடி’ சாக்லெட்டைப் பரிசளித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறினார் இந்தியப் பிரதமர். அவை எல்லாவற்றையும் விட இந்த சாக்லெட் பரிமாற்றம் இணையத்தில் பிரபலமாகி பங்குச்சந்தை வரை...
Tag - மெக்சிகோ
இரான், இஸ்ரேல், ரஷ்யா, உக்ரைன், ஆஃப்கன், லெபனான். கடந்த சில வருடங்களாகப் போர் என்றதும் நம் மனக்கண் முன் விரியும் நாடுகள் இவை. இவை தவிரவும் உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் போர்களைக் குறித்துப் பார்ப்போம். ஆப்பிரிக்க நாடான சூடான், கடந்த மூன்று ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் சிக்கியிருக்கிறது...
நல்ல வெயில். அவ்வப்போது கடல் காற்று தேகத்தின் மீது சற்றே படர்ந்து செல்லும். நீச்சல் குளத்தைப் பார்த்தபடி கால்களை நீட்டிச் சாய்ந்தவாறு படுக்கை. கண்களில் சன் க்ளாஸ். ஒரு கையில் புத்தகம், சிலர் கையில் கிண்டில். மறு கையில் ஜூஸ். ஜூஸ் என்றால் வேறென்ன? சரக்குதான். பெரும்பாலானோர் கையில் காக்டெய்ல், பீர்...
மெக்சிகோவில் உள்ள குவாடலஜாரா நகரில் இன்னும் சில மாதங்களில் உலகப் புகழ்பெற்ற FIFA கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. ஆனால் இந்நேரம் பார்த்து அங்கே கலவரமும் கோரச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. மெக்சிகோ மக்கள் இந்நகரை ‘பேய்கள் உலவும் ஊர்’ என்று பயந்து தவிர்த்து வருகின்றனர். இதற்கெல்லாம்...
போதைப் பொருள் கடத்தலுக்குப் பெயர் போன மெக்சிகோ கார்டல்கள், இப்போது எரிபொருள் கடத்தலிலும் ஈடுபடுகிறது என்கிற செய்தி வெளிவந்துள்ளது. அதுவும் தனியாக இல்லை, ஒட்டிப் பிறந்த உடன்பிறப்பு போல உள்ள அமெரிக்காவின் உதவியுடன் இந்தக் கள்ளக் கடத்தல் நடந்து வருகிறது. மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் உள்ள சிறிய...
மெக்சிகோ உள்ளிட்ட இதர மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து புலம்பெயர நினைக்கும் மக்களின் கனவில் மண்ணை அல்ல; பாறாங்கல்லையே தூக்கிப் போட்டுள்ளன அமெரிக்காவின் புதிய விதிமுறைகள். உலகின் ஓய்வில்லாத எல்லையாகச் சொல்லப்படுவது அமெரிக்காவின் தெற்கு திசையிலுள்ள மெக்சிகோ எல்லை. தினசரி சுமார் ஆறாயிரம் மக்கள் இங்கே...
மெக்சிகோவின் வாரன் பஃபெட் ஓய்வெடுக்கும் முடிவை ஒத்தி வைத்ததால் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தவர் கார்லஸ் ஸ்லிம். 1997ஆம் ஆண்டு. கார்லஸ் ஸ்லிம்மின் உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதய வால்வுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்குப் புகழ்பெற்ற...
இந்தியா அல்லது இந்தோனேசியா போல மிகப் பெரிய ஜனநாயகம் என்று கொண்டாடப்படும் தேர்தல் இல்லை மெக்சிகோ தேர்தல். ஆனால் இது ஒரு முக்கிய தேர்தல். ஆண்கள் அதிபர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் பரபரப்புகளில் சப்தமே இல்லாமல் ஆளும் கட்சி எதிர்க் கட்சி இரண்டுமே பெண் வேட்பாளர்களை அதிபர் தேர்தலுக்குக் களம் காண...
பாதுகாப்புத் தேடி பக்கத்து ஊரிலிருந்து தப்பி ஓடி அடைக்கலம் தேடி இரண்டு பேர் தற்காலிகமாகத் தங்க வந்தால், பாவமாக இருக்கிறது என அனுமதி கொடுப்பீர்கள். அதுவே இருநூறு பேர் வந்தால்? இரண்டாயிரம்? ஒரே ஓர் இரவென்றாலும் முடியாதுதானே? அப்படியான ஒரு நிலைதான், கனவுகள் மின்னும் தேசமான அமெரிக்காவிற்கும் இப்போது...
சென்ற வாரம் மெக்சிகோ நாட்டிற்கு விடுமுறையில் சென்ற போது மாயர்களின் கலாசாரம் பற்றிய பல தகவல்களையும் அவர்களது வரலாற்றில் சிறந்து விளங்கிய சிச்சன் இட்ஸா (Chichén Itzá) எனும் நகரத்தின் தொல்லியல் தளம் ஒன்றுக்கும் நேரில் சென்று பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. கொலம்பஸ் அமெரிக்கக் கடற்கரையைப் போய்ச்...














