Home » காசடித்த சாலை; கண்ணடிக்கும் நகைகள்
சந்தை

காசடித்த சாலை; கண்ணடிக்கும் நகைகள்

பாரிமுனையில் ஒவ்வொரு தெருவும் ஒரு குறிப்பிட்ட பொருள் விற்கும் மையமாக இருக்கிறது. ஆனால் மிண்ட் தெரு அப்படி அல்ல. இந்தத் தெருவில் இன்ன பொருள்தான் விற்கும் என்று வரையறுக்க இயலாதபடிக்கு எல்லா வகையான பொருள்களும் வாங்கலாம். பாரிமுனை வணிக மையத்தின் முக்கியமான தெருக்களில் ஒன்று மிண்ட். வணிகம் தொடங்கிய காலத்திலிருந்தே உள்ள பழமையான தெரு இது. இத்தெருவிற்கான இன்னொரு சிறப்பு ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் நீளமுள்ள நகரத்தின் நீளமான தெருக்களில ஒன்று. வால்டாக்ஸ் சாலைக்கு இணையாக ஓடும் தெரு. நமக்கு அடியும் வேண்டாம். நுனியும் வேண்டாம். நடுவில் ஆரம்பித்து நடுவில் முடித்துக்கொள்வோம். பூக்கடைக் காவல் நிலையத்திலிருந்து வலது புறம் திரும்பினால் மிண்ட் தெரு.

மெட்ரோவில் வந்திறங்கிய சக நடைபயணி மிண்ட் தெருவைத் தேடிக் கொண்டிருந்தார். “நான் விளையாட்டுக் கிளப்பில் சேர்ந்திருக்கிறேன். இந்தத் தெருவில் ஷூ வாங்கினால் நன்றாக இருக்கும். ஏற்கெனவே ஒரு முறை இங்கே தான் வாங்கினேன். அது தந்த சுகம்தான் இப்போது இவ்வளவு தூரம் என்னை வரவழைத்திருக்கிறது” என்றார். ‘வட இந்திய உணவு வகைகளுக்குச் சிறப்பு. அவற்றை உண்டு களிக்கலாம் என்றல்லவா வந்தோம்? இவர் இப்படிச் சொல்கிறாரே’ என்று தோன்றியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!