Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 4
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 4

4. ரானடேவின் மாணவர்

1885ம் ஆண்டு, பத்தொன்பது வயதான கோபால கிருஷ்ண கோகலே முதன்முறையாக மேடையேறினார். ‘பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இந்தியா’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய அந்தச் சொற்பொழிவு அவருடைய ஆங்கில மொழி வல்லமைக்காகவும் தகவல்களை எடுத்துரைத்த திறமைக்காகவும் மிகுந்த பாராட்டுகளை அள்ளிக்கொண்டது.

கல்லூரிக் காலத்திலிருந்தே கோகலே ஆங்கிலத்தில் கில்லாடிதான். அதற்கு அடித்தளம், அவருடைய மிகச் சிறப்பான நினைவாற்றல். சிக்கலான புத்தகங்களைக்கூட விறுவிறுவென்று படித்துவிட்டு மொத்தத்தையும் மனப்பாடமாக ஒப்பிப்பார். இதைப் பார்த்த சில மாணவர்கள் அவரைக் ‘கிளிப்பிள்ளை’ என்று கேலி செய்வார்கள். கோகலே அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்த புத்தகத்தைப் படிக்கச் சென்றுவிடுவார்.

பின்னர் கோகலே ஆசிரியரானபோது, ஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்கு எளிமையாகவும் துல்லியமாகவும் புரியும்படியும் சொல்லித்தரவேண்டும் என்பதற்காக அதைப்பற்றி ஆழமாக ஆராய்ந்து புரிந்துகொள்கிற திறமையை வளர்த்துக்கொண்டார். இதன்மூலம் அவருடைய தகவல் அறிவு விரிவுபெற்றதுடன், அந்தத் தகவல்களை இணைத்துப்பார்த்துச் சிந்திக்கிற பழக்கமும் வந்தது. அன்றைய இந்தியாவின் சமூக நிலையைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிய அவர் அதன் சிக்கல்களுக்குத் தன்னுடைய அறிவின்மூலம் தீர்வு காண முயன்றார், அந்தத் தீர்வுகளைக் கேட்போர் மனத்தை மாற்றும்வகையில் எடுத்துரைக்கக் கற்றுக்கொண்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!