Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 12
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 12

12. டால்ஸ்டாய் பண்ணை

கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வந்தபோது காந்தி ஒரு புதுமையான சமூகப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார். அதன் பெயர், ‘டால்ஸ்டாய் பண்ணை.’

புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயின் படைப்புகள் காந்திக்கு மிகவும் விருப்பமானவை. அவர் எழுதுகிறவற்றைச் சும்மா படித்துவிட்டுச் சென்றுவிடாமல், அவற்றைப்பற்றி ஆழமாகச் சிந்திப்பது, தான் இருக்கும் சூழலில் அந்தச் சிந்தனைகள் எப்படிப் பொருந்துகின்றன, எப்படிப் பொருந்தவில்லை, இதை மேம்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று திட்டமிடுவது, அந்தத் திட்டங்களைச் செயல்படுத்திப் பார்த்துக் கற்றுக்கொள்வது என்று டால்ஸ்டாயைத் தன்னுடைய வழிகாட்டிகளில் ஒருவராகவே ஆக்கிக்கொண்டிருந்தார் காந்தி.

தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம் ஒரு நீண்ட போராட்டம். சில வாரங்களிலோ மாதங்களிலோ அதற்குத் தீர்வு கிடைத்துவிடப்போவதில்லை. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளுக்கு நம்பிக்கையோடு போராடவேண்டும். நடுவில் வரக்கூடிய தோல்விகளைக் கண்டு அவர்கள் மனம் தளரக்கூடாது. சொல்லப்போனால், அதுபோன்ற தோல்விகள் அவர்களுடைய முயற்சியை இன்னும் வலுப்படுத்தவேண்டும். இதுமட்டும் சரியாக நடந்துவிட்டால், கத்தியோ, துப்பாக்கியோ, எறிகுண்டோ, போர்க்கப்பலோ தேவையில்லை, எப்பேர்ப்பட்ட மலையையும் அமைதியான புரட்சியின்மூலம் திருப்பிவிடலாம்.

இதையெல்லாம் சொல்வது எளிது. எதார்த்தத்தில் செயல்படுத்துவதென்றால் பல சிக்கல்கள், தொல்லைகள் வரும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சிந்திப்பார்கள். யாரையும் குறை சொல்லாமல் அனைவருடைய மன உறுதியையும் வலுப்படுத்தவேண்டும். அதற்குக் காந்தி கண்டுபிடித்த உத்திதான் டால்ஸ்டாய் பண்ணை என்னும் சமூக அமைப்பு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!