Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 84
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 84

84. புழுதியைப் பொன்னாக்குவார்

கோகலே தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று திரும்பியபிறகு, மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார், அவர்களுக்குக் காந்தியை அறிமுகப்படுத்தினார், ‘அவர் வெறும் புழுதியைக்கூட உயர்ந்த மனிதராக்கிவிடுவார்!’

குஜராத்தைச் சேர்ந்த மகாதேவ் தேசாய் என்ற இளைஞர் கோகலேவின் இந்தப் புகழாரத்தைப் படித்தார். காந்தியின்மீது அவருக்குப் பெரிய மதிப்பு உண்டானது, காந்தியைப்பற்றி இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டார்.

பின்னர் 1915ல் காந்தி அகமதாபாதில் தன்னுடைய சத்தியாக்கிரக ஆசிரமத்தைத் தொடங்கினார், அதன் விதிமுறைகளை ஒரு சிறு ஆவணமாக வெளியிட்டார், ‘இதைப் படிக்கிற எல்லாரும் உங்கள் கருத்துகளை, விமர்சனங்களை எனக்கு அனுப்புங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

அன்றைய அகமதாபாதின் பண்பாட்டு மையமாகக் கருதப்பட்ட ஓர் அமைப்பு, ‘குஜராத் கிளப்’. 1888ல் நாகர்ஜி தேசாய் என்ற ஆசிரியரால் தொடங்கப்பட்ட இந்தச் சங்கம் இன்றுவரை சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது. காந்தியும் அவருடைய உள்வட்டத் தலைவர்களில் ஒருவரான சர்தார் வல்லபாய் படேலும் 1916ல் முதன்முதலாகச் சந்தித்த இடம் இதுதான்.

தன்னுடைய ஆசிரமத்தைப்பற்றி அகமதாபாத் மக்கள், பெரிய மனிதர்களுடைய கருத்துகளை அறிய விரும்பிய காந்தி ஆசிரம விதிமுறைகளின் சில பிரதிகளைக் குஜராத் கிளப்புக்கு அனுப்பியிருந்தார். இந்த ஆவணங்கள் அங்கிருந்த ஒரு மேசையில் எல்லாருடைய பார்வைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!