Home » மும்பையில் ஓர் இசைச் சாலை
இசை

மும்பையில் ஓர் இசைச் சாலை

இசைச் சாலை

சாலைப் பயணம் என்றாலே பொதுவாகச் சத்தமும் இரைச்சலும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் நாம் செல்லும் சாலையே நமக்காகப் பாடினால் எப்படியிருக்கும்?

மும்பையின் பெருமைமிகு திட்டமான தர்மவீர் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் கடலோரச் சாலையில் இசைச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நரிமன் பாயிண்டிலிருந்து வடக்கு நோக்கி வொர்லி நோக்கிச் செல்லும் பாதையில், கடலுக்கடியில் உள்ள பிரம்மாண்டச் சுரங்கப்பாதையைத் தாண்டி வெளியே வந்தவுடன், சுமார் ஐந்நூறு மீட்டர் தூரத்துக்கு இந்த அற்புத அனுபவத்தைப் பெறலாம்.

இந்த நவீனத் திட்டத்தை மும்பை மாநகராட்சி (BMC) ஹங்கேரியத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுத்துள்ளது. இதற்கான யோசனையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் ஷெவாலே முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 11, 2026 அன்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரால் இந்தச் சாலை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவின்போது, முதல்வரும் துணை முதல்வரும் வாகனம் ஓட்டி இந்த அனுபவத்தை நேரடியாகப் பெற்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!