உள்நாட்டுப் போர், கலவரங்களுக்கு மத்தியில் மியான்மரில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது முதன்முறையாகப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு தேர்தலில் ஆங் சாங் சுகி தலைமையிலான கட்சி 83 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றது. அத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, புதிய அரசு அமைந்த சில மாதங்களிலேயே அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைபற்றியது. ஆங் சாங் சுகி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.
ராணுவ ஆட்சிக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டக் குழுக்கள் உருவாகின. அவர்களை அடக்க ராணுவம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. 2021ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 90,000 மக்கள் கொல்லப்பட்டனர், 3.5 மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்தனர். தேசத்தின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் மனிதாபிமான அடிப்படையிலான உதவி தேவைப்படும் நிலையில் இருந்தனர். முழு அளவிலான உள்நாட்டுப் போராகச் சூழ்நிலை மாறியிருந்தது.















Add Comment