கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை திருமலையில் (திருப்பதி) சநாதன தார்மிகக் கருத்தரங்கம் என்ற பெயரில் மூன்று நாள் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜீயர்கள், மடாதிபதிகள், சாதுக்கள் ஏராளமானோர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதிலொன்று, மாற்று மதத்தவர் விரும்பினால் அவர்கள் இந்து மதத்தில் இணையலாம் என்பதும் அவர்களுக்குத் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புனித நீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்படும் என்பதும் அவர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்பதும் ஆகும்.
இம்மாநாடு வேறு எங்கு நடந்திருந்தாலும் இந்தளவுக்குக் கவனம் பெற்றிருக்க வாய்ப்பில்லை. நடந்த இடம் திருமலை திருப்பதி என்பதாலும் தேவஸ்தானமே முன்னின்று ஏற்பாடு செய்தது என்பதாலும் உலகம் கூர்ந்து கவனிக்க வழியானது.
பாரதிய ஜனதா ஆளும் நாட்டில் இம்மாதிரியான மாநாடுகள் நடப்பதில் வியப்பில்லாதிருக்கலாம். ஆனால் மேலே கண்ட குறிப்பிட்ட தீர்மானம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
Add Comment