Home » மின்சாரக் (கொடுங்) கனவு
நம் குரல்

மின்சாரக் (கொடுங்) கனவு

தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு ஒருமுறை மொத்தமாக ஏற்றாமல் ஒவ்வொரு வருடமும் கட்டண மாறுபாடுகளைச் செய்கிறது தமிழ்நாடு மின்துறை ஒழுங்குமுறை ஆணையம். 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இம்முறை நடைமுறைக்கு வந்தது. கடந்தாண்டு 6 சதவிகிதம் உயர்த்தப்பட்ட கட்டணம், இந்தாண்டு 4.88 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

எப்போதும் போல 100 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோருக்கு மின்கட்டணம் இல்லை என்பதால் அவர்களுக்கு மாற்றம் ஏதும் இல்லை. சுமார் ஒரு கோடி மின் நுகர்வோர் இப்படி 100 யூனிட்களுக்குள் பயன்படுத்தும் மக்களாக இருக்கிறார்கள். மற்றவர்களுக்குக் குறைந்தபட்சம் 20 காசுகளில் இருந்து அதிகபட்சம் 45 காசுகள் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. 400 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்குச் சுமார் 20 காசுகள் கட்டணம் உயர்ந்துள்ளது. சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்த வரையறைக்குள் வருகிறார்கள். மாதந்தோறும் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 25 ரூபாய் கட்டணம் அதிகப்படியாகக் கட்டவேண்டிவரும். 500 யூனிட்கள் மேல் இருப்போர் மாதம், சுமார் 40 ரூபாய் அதிகமாகச் செலுத்தவேண்டியிருக்கும்.

பணவீக்க விகித அடிப்படையில் இக்கட்டணமானது மாற்றியமைக்கப்படுகிறது. ஒரேடியாக உயர்த்தி சுமையை திடீரென மக்கள் தலையில் சுமத்தாமல் வருடந்தோறும் சிறிது சிறிதாக உயர்த்துவது ஆணையத்தின் பணி. 2027 ஆம் ஆண்டு வரை இந்த முறையைக் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. என்னதான் லாப நோக்கமின்றிச் செயல்படும் அரசு நிறுவனம் என்றாலும் பணவீக்கத்தினால் ஏறும் நட்டத்தை ஈடுகட்ட விலையேற்றம் தவிர்க்க முடியாததே. ஆனால், எதைத் தவிர்க்க முடியுமோ அதிலும் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் சிக்கல். ஒரு நாளைக்கு எத்தனை முறை மின்சாரம் நிறுத்தப்படும் என்பதற்குக் கணக்கு வழக்கே கிடையாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!