அறநிலையத் துறை சார்பில் பழனியில் நடத்தப்பட்ட முருகர் மாநாடு இருவிதமான வாத-விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. சென்ற வருடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சநாதனத்துக்கு எதிராகப் பேசிய கருத்துகள் இந்துத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதும் உதயநிதியின் மீது வழக்கு தொடரப்பட்டு இன்றும் அது நடந்துகொண்டிருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. முருகரின் பெயரால் இந்த அரசு விழா நடத்துவதும் அமைச்சரே அதை வாழ்த்திப் பேசுவதும் வெறும் அரசியலன்றி வேறில்லை என்பது ஒரு தரப்பு.
முருகனுக்கும் சநாதனத்துக்கும் என்ன தொடர்பு? முருகன் தமிழ்க் கடவுள். தமிழ் மண்ணின்-தமிழ் மக்களின் கடவுள். ஒரு நாத்திகவாத திராவிட அரசு முருகனுக்கு விழா எடுப்பது அவ்வகையிலும் பொருத்தமற்றது என்பது இன்னொரு தரப்பு.
தமிழ்நாட்டு அரசு முருகனுக்கு விழா எடுத்தது, இந்துத்துவர்கள் அதை விமரிசித்தது, தமிழ் தேசிய உணர்வாளர்களும் அதனை விமரிசிப்பது – சந்தேகமின்றி அனைத்தும் அரசியல்தான். ஆன்மிகத்துக்கோ, பக்திக்கோ இங்கே அணுவளவும் இடமில்லை.
Add Comment