சென்னை நகரின் தீராப் பிரச்னைகளுள் முதன்மையானது, வடிகால் வழித் தடங்கள். மழைக்காலங்களில் பெரும்பாலான பகுதிகள் தாற்காலிக நீர்த்தேக்கங்களாகிவிடுவது வழக்கம். கடந்த சில வருடங்களாகச் சில பராமரிப்புப் பணிகளும் தற்காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும் சிக்கல் முழுமையாகச் சரியாக நிச்சயமாக இன்னும் காலம் பிடிக்கும்.
இதனிடையில், கிண்டியில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தில் ஏழு குளங்கள் அமைத்து அதன் மூலம் வேளச்சேரி வரையிலான பிராந்தியங்களின் மழைக்காலப் பிரச்னையைத் தீர்க்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாடகை பாக்கிக் காரணத்தினால் ரேஸ் கோர்ஸ் வளாகத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தியதை அடுத்து, அங்கே நான்கு குளங்கள் அமைத்து மழை நீர் சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஏற்கெனவே ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் மூன்று குளங்கள் பராமரிப்பின்றி உள்ளன என்பதால் அவற்றையும் சீரமைத்து, பிரம்மாண்டமான ஏழு குளங்களை அங்கே அமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை இரண்டு குளங்கள் அமைக்கும் பணி முழுமையடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. மீதமுள்ள பணியும் இம்மழைக்காலம் முடிந்த பின்பு வேகமெடுத்து அடுத்த ஆண்டில் நிச்சயமாக நிறைவேறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. பிரச்னை அதுவல்ல.
Add Comment