மத்திய அரசு தாக்கல் செய்த இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பன்னிரண்டு லட்சம் வரை ஈட்டும் வருமானத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவர்.
பலன் பெற்ற ஒரு கோடி மக்கள் மிச்சப்படுத்தும் பணத்தை வைத்து, நிறைய பொருள்கள் வாங்கி சில்லறை விற்பனைச் சந்தையில் வியாபாரம் கூடி, அதன் பொருட்டு உற்பத்தி பெருகி, மீதம் உள்ள நூற்று நாற்பத்தொரு கோடி மக்கள் பலனடைவார்கள் என்று நிதியமைச்சர் எதிர்பார்க்கிறார். நாட்டின் தொண்ணூறு சதவிகித மக்களுக்குப் புதிதாக எந்த அறிவிப்பும் இல்லாத பட்ஜெட் பற்றிய பெருமை எங்கெங்கும் எதிரொலிக்கிறது.
டெல்லியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், நேரு காலத்தில் பன்னிரண்டு லட்சம் சம்பாதித்தால் நான்கில் ஒரு பங்கு வரியாகப் போகும் எனக் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர். இந்திரா காலத்தில் பன்னிரண்டு லட்சத்தில் பத்தை வரியாக எடுத்துக் கொண்டிருப்பார்கள், முந்தைய ஆட்சியிலும் கூட இரண்டு லட்சத்துக்கு மேல் வரி என்று சொல்லியிருக்கிறார். மக்களிடம் வாக்கு கேட்கும் மேடையில் இதைப் பேசியுள்ளார்.
Add Comment