Home » வேண்டாம் விஷப் பரீட்சை!
நம் குரல்

வேண்டாம் விஷப் பரீட்சை!

நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்திலும் வாஜ்பாயி காலத்திலும் இது நடந்தது. (அப்போது தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.) ஆனால் அத்தேவை என்பது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். மாநிலங்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு திட்டமிடுவது என்ன? கணக்கெடுப்புக்குப் பிறகு, மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் கூட்டியோ குறைத்தோ அமைத்துக்கொள்ளலாம் என்பது.

சந்தேகமின்றி இது மிகவும் அபாயகரமான எண்ணம். பாரதிய ஜனதா ஆளும் அல்லது கூட்டணியில் இருக்கும் பல வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகம். உதாரணமாக உத்தர பிரதேசம். அங்கே இன்னும் ஏழெட்டுத் தொகுதிகளைக் கூட்டி, மேலும் ஏழெட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்ப்பைத் தந்து, அவர்கள் வழியாக மேலும் மேலும் நிதியைக் கொண்டு சேர்ப்பது சாத்தியம்.

ஒப்பீட்டளவில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அந்த அளவுக்கு மக்கள் தொகை கிடையாது. இதன் மறைமுகச் செய்தி என்னவென்றால், குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லி, மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்கும் பணியில் கணிசமான பங்காற்றியவை தென் மாநிலங்களே. அது மத்திய அரசு கேட்டுக்கொண்டதனால் செய்யப்பட்ட பிரசாரம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!