Home » விபரீத ராஜாக்களின் யோக காலம்
நம் குரல்

விபரீத ராஜாக்களின் யோக காலம்

ராஜ் தாக்கரே

மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச் சுட்டிக்காட்டி, மகாராஷ்டிரம் அம்மாநில மண்ணின் மொழியைக் காக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்துப் பேசியிருக்கிறார். இதைத் தமிழர்களின் இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க அங்கீகாரமாகத் தமிழ் ஊடகங்கள் சித்திரித்து வருவதைக் காண முடிகிறது.

மொழி என்றல்ல. எதையுமே ‘திணிப்பது’ என்பது அருவருப்பானது. ஏற்க இயலாதது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. சுய மரியாதை உள்ள எம்மக்களும் அத்தகைய திணிப்புகளை எதிர்க்கவே செய்வார்கள்.

இந்தித் திணிப்பு முயற்சிகளின் மிக நீண்ட வரலாற்றினைத் திரும்பிப் பார்த்தால் தமிழ்நாட்டினைப் போலவே பல்வேறு மாநிலங்கள் அதில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைப் பல்வேறு காலக்கட்டங்களில் கண்டறிய முடியும். இதில் பல வடக்கு-வட கிழக்கு மாநிலங்களும் அடங்கும். ஆனால் மகாராஷ்டிரம் உள்படப் பெரும்பாலான வட மாநிலங்களில் இந்தியை முதன்மை மொழியாக்கிவிட முடிந்ததைப் போலத் தமிழ்நாட்டில் முடியாத ஒன்றுதான் வித்தியாசம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!