ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் ஆவேசமாகப் பேசுகிறார்கள். குற்றவாளிகளை – நபர்களானாலும் இயக்கங்களானாலும் அண்டை நாடானாலும் கடுமையாகத் தண்டிப்போம் என்று பிரதமர் சொல்கிறார். சில அரசியல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அதை நோக்கிச் செயல்படத் தொடங்குகிறார்கள்.
அமெரிக்காவில் நடந்தாலும் இந்தியாவில் நடந்தாலும் உலகில் வேறெங்கு நடந்தாலும் என்ன நோக்கத்துடன் நடந்தாலும் எல்லா நாட்டினரும் எதிர்வினை ஆற்றும் விதம் இதுவே.
இதுவரை எல்லாம் சரி. யாருமே விமரிசிக்க முடியாது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக நம் நாட்டில் ஒவ்வொரு தீவிரவாதச் சம்பவமும் ஒரு போருக்கான தொடக்கப்புள்ளி என்று கருதும் போக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. எல்லை, ராணுவம், போர் என்று பேசாவிட்டால் அது தேசபக்தியல்ல என்று நினைக்கும் மனப்பாங்கு வளர்ந்திருக்கிறது.
Add Comment