Home » ஊடல் காவியம், உலக மகா அபத்தம்!
நம் குரல்

ஊடல் காவியம், உலக மகா அபத்தம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே இருந்த நட்பு இல்லாமல் போயிருக்கிறது. சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் வழியாக நடந்த அந்த பத்து நாள் ஊடல் காவியம் டெலிட் செய்யப்பட்டாலும் நிலைத்து வாழும்.

அமெரிக்காவை மீண்டும் உயர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதி பிக் பியூட்டிஃபுல் பில் ஆக்ட். வரி விதிப்பு, மானியக் குறைப்பின் வழியாக அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சட்ட மசோதா. தேவையற்ற செலவைக் குறைத்தாலே அமெரிக்கா மீண்டும் உயர்ந்துவிடும் என்பது டிரம்ப், எலான் கூட்டணியின் தேர்தல் முழக்கம். ​பல்கலைக்கழக ஆய்வு மானியங்கள், நலவாழ்வுத் திட்டங்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் இதில் அடங்கும். அதாவது, அவசியமானதாகவே இருந்தாலும் தேவையற்றது என இவ்விருவரும் கருதினால் போதும். இந்தப் பேரழகுச் சட்டத்தில்தான் இருவருக்கும் கருத்து முரண்பாடு வந்துவிட்டது.

ஏமாற்றம். இதுதான் சட்ட மசோதவைப் பற்றிய எலான் மஸ்க் கருத்து. அதை நேர்காணல் ஒன்றில் சொல்லியதில் தொடங்கியது பஞ்சாயத்து. டிரம்ப்பும் எலான் மஸ்கும் என்ன பேசினார்களோ தெரியாது, மறுநாள் எனக்களிக்கப்பட்ட பொறுப்பின் காலம் முடிகிறது, நன்றி வணக்கம் என்றொரு ட்வீட்டை வெளியிட்டார் எலான். டாட்ஜ் எனச் சுருக்கி அழைக்கப்படும் அரசின் தேவையற்ற செலவினங்களைக் குறைக்கப் பரிந்துரை தரும் அமைப்பின் பொறு​ப்பேற்று வழிநடத்தும் சிறப்பு அரசு அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார் எலான். அது முடிவுக்கு வந்தது. பதிலுக்கு டிரம்ப், வெள்ளைமாளிகையில் இன்றுதான் எலானுக்குக் கடைசிநாள் எனப் பதிவிட்டார். என்ன இருந்தாலும் நம்மோடு எப்போதும் துணையிருப்பார், இன்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்திப்போம் என்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!