அரசியல் என்ற துறைக்குள் நிகழ சாத்தியமுள்ள அனைத்துவிதமான அபத்த நாடகங்களையும் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்த்தறிந்திருப்பார்கள். தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிகாரப் போட்டி இன்னொரு மலின உணர்ச்சி நாடகமே அன்றி இன்னொன்றில்லை. தந்தையர் தினத்துக்கு அக்கட்சியின் செயல் தலைவர் வெளியிட்ட செய்தி, அனைத்துக்கும் உச்சம்.
ஆனால், இந்தக் கட்சிக்குள் அடுத்தடுத்து நடைபெறும் காட்சிகள், மக்கள் சற்றேனும் மரியாதை வைத்திருக்கும் தலைவர்களின் உண்மை உருவினை உரித்துக் காட்டுவதை மறுப்பதற்கில்லை. அதற்காகவேனும் இத்தகைய தருணங்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியை ஒரு மாநிலக் கட்சியாகக் கருதுவது அக்கட்சியின் வாக்கு வங்கி அடிப்படையில் (அதிகபட்சம் ஆறு சதவீதம்) சரியாக இருக்கலாம். உண்மையில் அது ஒரு சாதிக் கட்சி மட்டுமே. மாநில மக்களின் நலன், மாநில உரிமைகள் சார்ந்து அக்கட்சி முன்னெடுத்த முயற்சிகள் என்று ஏதுமில்லை.















Add Comment