Home » குற்றம் தவிர்
நம் குரல்

குற்றம் தவிர்

உண்மையை உண்மை என்று நம்பவைப்பதைவிடப் பொய்யைப் பொய் என்று நிறுவுவது எளிது. தஷ்வந்த் விடுவிக்கபட்ட தீர்ப்பின் வரிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.

சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொன்றார் தஷ்வந்த். இதை நீதிமன்றங்கள் உறுதி செய்தன. அவருக்குத் தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டில், இக்குற்றம் நடந்தபோது இந்தியா முழுக்க ஏற்பட்ட அதிர்வைவிட 2025ல் தற்போது அவர் விடுவிக்கப்படும்போது ஏற்பட்டுள்ள அதிர்ச்சி அதிகமாக இருக்கிறது.

மக்களுக்கு எழும் பல்வேறு கேள்விகளுக்கு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவான பதில்கள் உள்ளன. குற்றவாளியிடமிருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் முறையான வழியில் பெறப்படவில்லை. சிசிடிவி பதிவுகள் இல்லை. குற்ற நிகழ்விடத்தில் கைப்பற்றிய பொருள்கள் சேகரித்த ஆதாரங்களின் பட்டியலில் பதியப்படவில்லை. கொலை நடந்த நேரம், எரித்ததாகச் சொல்லப்பட்ட நேரம், கைதான நேரம் எனப் பலவும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகவில்லை.

இல்லாதவற்றைவிட இருப்பவை இன்னும். அதிக சந்தேகங்களை எழுப்புகின்றன. சிறுமியை எரித்துக் கொல்லும் குற்றவாளி உள்ளாடையையும் பையையும் அப்படியே விட்டுச்செல்வாரா? கடைசியாகச் சிறுமியைப் பார்த்த சாட்சியான முருகன் அத்தகவலை அன்றே ஏன் சொல்லவில்லை? அப்படிச் சொல்லியிருந்தால் உடனடியாக தஷ்வந்த் வீட்டில் சோதனை நடத்தியிருக்கலாமே?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!