Home » விநோத பொம்மலாட்டம்
நம் குரல்

விநோத பொம்மலாட்டம்

‘ஜெருசலேமில் அமைதியும் புதிய வரலாறும் கடவுளின் அருளால் ஆரம்பமாகிவிட்டது’ என்று டொனால்ட் டிரம்ப் பெருமையாக அறிவித்தார். ஆனால் நெதன்யாகு இந்த வார்த்தைகளை வழிமொழியவில்லை என்பதை எத்தனைப் பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.

எகிப்தின் கொண்டாட்ட மேடையில் மிக முக்கியமான இரண்டு தரப்பினர் இல்லை. நெதன்யாகுவும், ஹமாஸ் தலைவர்களும். அவர்கள் வராததற்கு ஆளுக்கொரு காரணம் சொன்னார்கள். போரின் முக்கியக் கட்சிகளே இல்லாத சமாதான விழா!

போலிப் புகழுரைகள் பொழிந்தன. போலி முகங்கள் சிரித்துக் கொண்டிருந்தன. ஆனால் உண்மையான மகிழ்ச்சி எங்கே இருந்தது?

2,000 பாலஸ்தீன சிறைக் கைதிகளின் முகங்களிலும், அவர்களை வரவேற்ற மக்களின் கண்ணீரிலும் மட்டும். இஸ்ரேலுக்குத் திரும்பிய 20 பிணைக் கைதிகளின் குடும்பங்களின் நெகிழ்வும் உண்மையானதே. இறந்துபோன பிணைக்கைதிகளின் உடல் பாகங்களும் அனுப்பிவைக்கப்பட்டன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!