Home » எங்கே சென்றன சட்டமும் ஒழுங்கும்?
நம் குரல்

எங்கே சென்றன சட்டமும் ஒழுங்கும்?

சட்டம் ஒழுங்கு செயலிழந்துள்ளது.

இது பொதுவாக ஆளும் தரப்பு மீது எதிர்க்கட்சிகள் எப்போதும் வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால் இப்போது இந்தக் குரல்கள் தமிழ்நாட்டில் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் வலுவாக எழ ஆரம்பித்துள்ளதுதான் கவலை அளிக்கிறது.

மாநிலத்தில் நடப்பு ஆட்சி முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. 2021இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் அரசியல் உறுதியின்மை, கோஷ்டிப் பூசல்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் என நிறைய சிக்கல்கள் இருந்தன.

எல்லாவற்றுக்கும் மேலாக, அப்போது நடைபெற்ற பல மக்கள் போராட்டங்களால் அதிமுக மீது பரவலாக அதிருப்தி ஏற்பட்டிருந்தது. அவற்றில் பெரும்பாலான போராட்டங்கள், அப்போதைய எதிர்க்கட்சியான திமுகவும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் முன்னெடுத்தவை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Natarajan Panchanatham says:

    இடித்துரைத்திருக்கிறது நம் குரல். இதை முதல்வர் படிக்க வேண்டும். இதையெல்லாம் அவர் கவனத்திற்கு கொண்டு செல்வார்களா என்று தெரியாது. கலைஞர் எப்போதும் முதலில் காலையில் செய்தித்தாள் படிக்கும் வழக்கம் வைத்திருந்தார். குறிப்பாக முதல்வராக இருந்த போது
    அதில் கூடுதல் கவனம் செலுத்துவார். இது டிஜிட்டல் பேப்பர். இதில் உள்ள செய்தி அவர் கவனத்திற்கு செல்லுமா என்று தெரியவில்லை.
    எந்த கட்சியின் தேர்தல் முடிவுகளையும் தீர்மானிப்பது அந்தந்த கட்சி
    ஓட்டுகளை மீறி நடுநிலை வாக்காளர்களின் ஓட்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    பாபநாசம் நடராஜன்

  • Mohaideen Batcha Jaffer Sadik says:

    True

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!