Home » காங்கிரஸ் இனி என்ன செய்ய வேண்டும்?
நம் குரல்

காங்கிரஸ் இனி என்ன செய்ய வேண்டும்?

கட‌ந்த ஏ‌ப்ர‌ல் மாதம் அகமதாபாத் நகரின் சபர்மதி ஆற்றங்கரையில் அ‌கில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகக்குழு கூடியது. பல பத்தாண்டுகளாகத் தேசமெங்கும் சுணங்கியிருக்கும் கட்சியின் செயல்பாடுகளை முடுக்கிவிடுவதற்கான முயற்சி அது. அதிகாரம் மேலிருந்து கீழ் நோக்கி இல்லாமல், மாவட்ட அளவில் அதிகாரத்தைப் பகிரும் நோக்கத்தோடு நடைபெ‌ற்ற இந்தக் கூட்டம் எந்தப் பலனையும் தரவில்லை என்பதை பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பங்குபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைப் பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றது. இதில் பாஜக மட்டுமே 89 தொகுதிகளில் வென்றது. இந்திய அள‌வி‌ல் பாஜகவுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் காங்கிரஸ் வெறும் ஆறு தொகுதிகளில் வென்று திருப்தி அடைந்திருக்கிறது.

ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் சகிக்க முடியாத தோல்வியைச் சந்தித்திருக்கிறது காங்கிரஸ். இரட்டை இலக்கத்தை எட்டவே காங்கிரஸ் போராட வேண்டியிருக்கிறது என எல்லா மேடைகளிலும் பேசி வருகிறார் மோடி. நாங்கள் தொடர்ந்து பெறும் வெற்றியின் விளைவாக, காங்கிரஸ் முஸ்லீம்களுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்குமான கட்சியாக மாறிவிட்டது எனப் பொது மேடையில் பேசியிருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!