தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகள் 1959இல் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சட்டவிரோதமாகக் கூடுதல் கனிமங்கள் எடுப்பதைத் தடுக்கவும், அரசு நிலங்களைச் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கைகள் உதவும்.
தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு பல மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இரும்புத்தாது, பாக்ஸைட் போன்ற பெருங்கனிமங்கள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் கிடைக்கின்றன. குவார்ட்ஸ், சிலிக்கா மணல் போன்ற சிறு கனிமங்கள் பல மாவட்டங்களிலும் நிறைந்திருக்கின்றன. இவை தவிர அணுசக்திக் கனிமங்களும், சுண்ணாம்புக் கற்களும், கனிம எண்ணெய்களும் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டின் தொன்மையான புவியியல் அமைப்பைப் பாதுகாக்கவும், கனிம வளங்களைக் கண்டறிந்து நிர்வகிக்கவும், அவற்றைச் சரியான வணிகப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தவும் 1983ஆம் ஆண்டு புவியியல் மற்றும் சுரங்கத்துறை உருவாக்கப்பட்டது.















Add Comment