எட்டு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர். ஆளுநர்கள் மாற்றம் என்பது சாதாரணமாக நடப்பதுதான். அது ஏன் இப்போது இவ்வளவு சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது?
இரண்டு காரணங்கள். முதலாவது, தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இரண்டாவது, மாற்றப்பட்ட ஆளுநர்களின் சர்ச்சைக்குரிய பின்னணி. கூடுதலாக இன்னொரு கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. ஆளுநர்களின் பதவிக் காலம் முடியாமல் எந்தக் காரணங்களையும் வெளிப்படையாகச் சொல்லாமல் ஏன் இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன?
மேற்குவங்க ஆளுநராக மூன்றரை ஆண்டுக் காலம் பதவி வகித்தவர் சி.வி. ஆனந்த போஸ். இதுவே போதும் எனத் திடீரென ராஜினாமா செய்துவிட்டார். இதற்கெனவே காத்திருந்ததுபோல அவருடைய ராஜினாமா குடியரசுத் தலைவரால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இது அதிர்ச்சியையும் கவலையையும் அளித்திருக்கிறது.















Add Comment