நம் நாட்டில் ஒரு வழக்கம் உண்டு. பெருந்தலைவர்களின் பிறந்த நாள் அல்லது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினம் என்றால், அதனை முன்வைத்துச் சிறையில் இருக்கும் சில கைதிகளை நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்வார்கள். கவனிக்க. நன்னடத்தை இருந்தால் மட்டும். மன்னிக்கக் கூடிய குற்றமாகக் கருதப்பட்டால் மட்டும். அனுபவித்த தண்டனைக் காலம் போதும் என்று நீதித் துறையும் சிறைத்துறையும் ஒரு மனதாகக் கருதினால் மட்டும்.
உணர்ச்சி வேகத்தில் ஒரு குற்றச் செயலில் ஈடுபடுபவர் பின்னர் மனம் வருந்தி, செய்தது தவறு என்று உணருவாரானால், அதன் தொடர்ச்சியாகச் சிறைக்காலத்தில் அவரது நடவடிக்கைகள் அப்பழுக்கற்றவையாக இருக்குமானால் இத்தகு சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. அதுகூட ‘வாய்ப்பு’ மட்டும்தான். உறுதி கிடையாது.
உண்மை !!! நல்ல நோக்கத்தில் தொடங்க பட்ட பல விஷயங்கள் அரசியல் வாதிகளால் தவறாக வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்த படுகிறது