எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும் அதிரடியாகச் செயல்பட்டு ஒன்றிரண்டு தினங்களில் சுமார் இரண்டாயிரம் பேரைக் கைது செய்ய முடிகிறது என்றால் இது எவ்வளவு பெரிய துறை, எத்தனை ஆயிரம் பேர் இதில் பணியாற்றுவார்கள், எத்தனை லட்சம்-கோடிகள் முதலீடு இருக்கும், எவ்வளவு பெருந்தலைகள் இதில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று எண்ணிப் பார்த்து உண்மை உணர்வது பெரிய காரியமல்ல.
இன்றைக்குச் சில கள்ளச் சாராய மரணங்கள், சில நடவடிக்கைகளை எடுக்க வைத்திருக்கின்றன. அடுத்த வாரம் இது மறந்துவிடும். நடவடிக்கைகள் தன்னியல்பில் நின்றுவிடும். தொழில் தொடரத்தான் செய்யும். பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு மாவட்ட எஸ்.பிக்களின் குடும்பங்கள் தவிர வேறு யார் வாழ்விலும் எந்தப் பெரிய தாக்கமும் இராது. காலம் காலமாகத் தொடரும் பிழைக்கு இக்காலக்கட்டத்தின் களப்பலி அவர்கள் இருவரும். அவ்வளவுதான்.
தவறான முன் உதாரணம். இது கள்ள சாராயம் குடிப்பவர்களை ஊக்குவிப்பதற்கு சமம்?