Home » என்ன செய்யப் போகிறார் மோடி?
நம் குரல்

என்ன செய்யப் போகிறார் மோடி?

மோடி-ஸெலன்ஸ்கி

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு என்பது வலுவானதாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில் இதன் லாபங்களைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. மிக எளிய, மிகச் சமீபத்திய உதாரணம் – கடந்த ஓராண்டுக் காலமாக நம் நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை ஏறவில்லை என்பது. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பின் தொடர்ச்சியாகப் பல்வேறு ஆசிய நாடுகளில் கடுமையான வர்த்தக பாதிப்பு உண்டாகியிருக்கும் சூழ்நிலையில் இந்தியா இதனை ஓரளவு எளிதாகக் கடக்க முடிவதன் ஆணிவேர் இங்கே தான் உள்ளது.

ஆனால் தார்மீகம் என்று ஒன்று உள்ளது. அறம் என்று இன்னொன்றும் உள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு, என்ன சொன்னாலும் நியாயப்படுத்த முடியாத வடிகட்டிய அயோக்கியத்தனம் என்பதில் ஐயமில்லை. ஆனால் உறவு நிலையின் காரணம் பற்றி, இந்தப் படையெடுப்பு குறித்துக் கருத்து சொல்வதில்லை என்று இந்தியா நிலைபாடெடுத்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!