ஊழலும் மதவாதமுமே ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் நமது அரசியல்வாதிகளின் பேசுபொருளாக இருக்கும். இரண்டும் முக்கியமான பிரச்னைகள் என்பதிலோ, இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவை என்பதிலோ நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இவை இரண்டுமே இல்லாமல் போகும் நாள் கண்ணுக்கெட்டும் தொலைவில் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கட்சிகள் தயாராகத் தொடங்கிவிட்டன. கூட்டணி சாத்தியங்கள் ஆலோசிக்கப்படுகின்றன. வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. எதிராளி மீதான குற்றச்சாட்டுகளை நெட் ப்ராக்டிஸ் போல வீசிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாம் இன்னும் வேகமெடுக்கும், சூடு பிடிக்கும். தவறில்லை. எல்லாம் இருந்தால்தானே தேர்தல்?
Add Comment