ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, காங்லீபாக் மக்கள் புரட்சிகரக் கட்சி, புரட்சிகர மக்கள் முன்னணி என்கிற மூன்று அரசியல் கட்சிகளையும், இக்கட்சிகளின் ஆயுதப்படைப் பிரிவுகளான மணிப்பூர் மக்கள் படை, காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலைப் படை ஆகியவற்றையும் மத்திய உள்துறை அமைச்சகம் சட்ட விரோத அமைப்புகளாக அறிவித்துள்ளது. மேற்படி அமைப்புகள், கட்சிகள் அனைத்தும் மணிப்பூரில் செயல்பட்டு வருபவை.
இந்தக் கட்சிகளும் அமைப்புகளும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், ராணுவம்-காவல்துறை-பொதுமக்கள் என்ற மூன்று பிரிவினரின் மீதும் தாக்குதல் நடத்துவதாகவும், கொலைச் சம்பவங்களை நிகழ்த்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிரவும் இவர்கள் பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதமாக நடந்துகொள்வதாகவும் உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியிருக்கிறது.
Add Comment