‘மதம் என்பது கடவுளை அறிவதற்கான வழியில், மனித ஆன்மா கடந்து செல்லும் பாதை’ என்று காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்டு, கெட்டிப்பட்டிருந்தபோதுதான் காரல் மார்க்ஸும் காந்தியும் வேறு மாதிரி சிந்தித்தார்கள்.
காந்தியின் சித்தாந்தத்திற்கும் காரல் மார்க்ஸின் சித்தாந்தத்திற்கும் சம்பந்தமே இல்லை. ‘பணக்காரர்கள் ஏழைகளின்பால் இரக்கம் காட்ட வேண்டும்’ என்றார் காந்தி. காரல் மார்க்ஸோ, ‘ஆயுதமேந்திய பாட்டாளி வர்க்கம், பிரபுத்துவத்தை ஈவு இரக்கமில்லாமல் அடித்து நொறுக்க வேண்டும்’ என்றார். என்றாலும் ‘மதம்’ என்ற ஒரு விஷயத்தில் மட்டும் இருவரும் ஒரே கருத்தைத்தான் கொண்டிருந்திருக்கிறார்கள்.
‘மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகவும் ஆன்மா இல்லாத நிலைமையின் ஆன்மாவாகவும் உள்ளது. மதம் மக்களுக்கு அபின்’ என்றார் மார்க்ஸ்.
‘மதம் இதயமற்ற உலகின் இதயம்; (துன்பப்படும்) மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான போதை’ என்றார் மகாத்மா காந்தி.
அருமை !!! மதம் மலிவாகி போனதற்கு முதற் காரணம் எல்லா மதங்களிலும் உள்ள மத தலைவர்கள் ! மக்களின் இறை நம்பிக்கையை மூட நம்பிக்கையாமக்கி தங்கள் வளமாக்கி கொண்ட மதகுருக்கள் தான் அதிகம்.
இப்போது தங்கள் மதம் சார்ந்த அரசியல் வாதிகளுடன் கூட்டணி அமைத்து தங்கள் மத வியாபாரத்தை பாதுகாத்து கொள்வதில் மத தலைவர்கள் மும்மரம் காட்டுகின்றனர்.
இன்றைய காலத்தில் மதம் வாழ்வியல் முறையில்லை ? பலரின் வாழ்க்கைக்கான வழிமுறை மட்டுமே.