’எனக்கென்று ஒரு கனவு இருக்கிறது. வலிமையான, சுதந்திரமான, தன்னிறைவு பெற்ற, மனித குலத்திற்குச் சேவையாற்றுவதில் முன்னிற்கும் நாடுகளில் முதன்மையான நாடாக இந்தியா இருக்க வேண்டுமென்பதுதான் அந்தக் கனவு’ என்று மறைந்த ராஜிவ் காந்தி பேசினார்.
அன்றைக்கு ராஜிவ் காந்தி பேசியதைப் போலவே, இன்றைக்கு நமது பிரதமர் மோடிஜியும் நமது எழுபத்தைந்தாவது சுதந்திர தின விழா உரையில் பேசியிருக்கிறார். என்னவென்று? இந்தியா, தனது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்போது, எப்படி இருக்க வேண்டுமென்றும் அதற்கு நாம் ஐந்து சபதங்களை எடுத்துக் கொண்டு உழைக்க வேண்டுமென்றும் பேசியிருக்கிறார்.
இந்த ஐந்து சபதங்களைப் பார்ப்பதற்கு முன்பு, வெல்லமாகப் பேசுவதில் வல்லவரான நமது பிரதமர், சென்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் உதாரணத்திற்கு ஒன்றே ஒன்றை மட்டும் பார்ப்போம்.















Add Comment