Home » ஜஸ்ட் பாஸ்: நஸீமா ரஸாக்
ஆண்டறிக்கை

ஜஸ்ட் பாஸ்: நஸீமா ரஸாக்

ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் எழுத்து சார்ந்த செயல்களை சுயபரிசோதனை செய்து கொள்வது வழக்கம். எந்த ஜோடனையும் இன்றி கிடைத்த வெற்றி தோல்விகளைத் தராசில் வைத்துப் பார்ப்பதில் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. இதைச் செய்யும் போது கருணை கரிசனம் என்று எதுவும் இருக்காது. இது தானாகக் கிடைத்த ஞானம் அல்ல. ஆசிரியர் பாராவின் வழிகாட்டல்களுள் இதுவும் ஒன்று.

2024 ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சி முடித்து வீடு திரும்பும் போதே என் திட்டம் தடித்துப் போனது. மூன்று புத்தகங்கள் வெளியிட்ட உற்சாகமும் நம்பிக்கையும் உடம்பு முழுக்கப் பரவி இருந்தன. நான் எழுத நினைத்த புத்தகத்திற்குப் படிக்க ஆயிரம் பக்கங்கள் இருந்தன. அப்படியே உட்கார்ந்து எழுத முடியாது என்ற தெளிவு ஒரு மாதம் கழித்து வந்தது. பிப்ரவரி மாதமும் கடந்துவிட்டிருந்தது. எழுத ஆரம்பித்தேன். அடுத்த ஒரு மாதத்தில் பத்தாயிரம் வார்த்தைகள் முடித்திருந்தேன். அதற்கு மேல் கிணற்றில் போட்ட கல்லாகிப் போனது. பத்தாயிரம் என்பது கால்வாசி மட்டுமே. பதற்றம் தொற்றிக் கொண்டது. ஏப்ரலிலிருந்து மூன்று மாதங்களுக்கு அலுவலகத்தில் மிக முக்கியமான வேலை. அப்படி இப்படி நகரமுடியவில்லை. எப்பொழுதும் போல் மெட்ராஸ் பேப்பர் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தேன்.

வாழ்க்கை அதன் போக்கிற்கு என்னை அலைக்கழிக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. காலில் கட்டு. ஒரு மாதம் நடக்கவில்லை. “காலிற்குத்தானே கட்டு கைக்கு இல்லையே, எழுதலாமே “ என்று என் புலம்பலை யாருக்காவது தெரிந்திருந்தால் கண்டிப்பாகக் கேட்டிருப்பார்கள். முயற்சி செய்தேன். முடியவில்லை. சரி போகட்டும் என்று அடுத்த புத்தகத்திற்கான வேலையை ஆரம்பிக்கலாம் என்று எண்ணினேன். அது இரண்டு மூன்று பக்கங்களில் வற்றிப் போனது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!