Home » நீலம் பூத்த வனம்
சிறுகதை

நீலம் பூத்த வனம்

பேருந்து சமவெளியிலிருந்து மலையேறத் தொடங்கியிருந்தது. காட்டின் ரீங்காரங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. மேகங்கள் கீழிறங்கி, மலைக்குள் உலாவி தரையைத்தொட முயற்சி செய்துகொண்டிருந்தன. குளிர் ஏறத்தொடங்கியது. எதிர் வெயிலில் நீலமாய்த்தெரிந்த மலைகளெல்லாம் தணிந்து, இப்போது கரும்பச்சைக்கு மாறத் தொடங்கியிருந்தன.

மலைகள், எனது தொட்டில். இங்கேதான் பிறந்தேன், வளர்ந்தேன். என் எல்லா மகிழ்வுகளையும் மலையன்னையின் மடியிலேயே பெற்றுக்கொண்டேன். என் எல்லாத் துயர்களையும் அவளின் தோளணைத்தே ஆற்றிக்கொண்டேன். என் எல்லாப் பாதைகளும் அவளின் காலடியைச் சுற்றியே அமைந்திருந்தன. முதன்முறையாகப் பொருள் தேடி வெளிநாட்டிற்குச் செல்லும் சூழலில் சிக்கி வெளியேறி, ஒரு வருடத்திற்குப் பிறகு தாய் மடியைத் தேடித்திரும்பும் முதல் பயணம் என்பதால், குதூகலம் பெருகியிருந்தது. அன்னை மட்டுமா காரணம்.? கவிதாவும் அல்லவா..?

தோல் துளைத்து, எலும்பு துளைத்து, உயிர் துளைத்து, ஆன்மாவைக் குடைந்தது கவிதா எனும் பொன்வண்டின் நினைவு. அவள்தான் என் உலகம் என்று முடிவு செய்துவிட்ட நாளிலிருந்து காதலில் மூழ்கிக் கனிந்து கொண்டிருந்தேன். இந்த ஒரு வருடப் பிரிவு எத்தனை துன்பத்தில் வாட்டியது.?. இன்னும் சிலமணி நேரங்களில் அவளைப் பார்க்கப் போகிறேன் என்ற மகிழ்வே அடிவயிற்றிலிருந்து இனம் புரியாத உணர்வுகளை எழுப்பித் தொண்டைக்குக் கொண்டுவந்தது. தீரா ஓவியமென என் மனதில் பதிந்து போயிருந்த அவள் முகப்பதாகை இன்னுமொருமுறை எழுந்து வந்து சிரித்தது.

கவிதா என்னிடம் தன் காதலைச் சொன்ன அந்த அறுவடை நாள் மீண்டும் நினைவில் வந்தது. அதுவும் இதேபோன்றதொரு குளிர் மதியம்தான். அன்று கட்டம் போட்ட சட்டையும், பூப்போட்ட பாவாடையும் அணிந்திருந்தாள். தலைமுடியில் மண் பட்டுவிடக்கூடாது என்பதற்காகத் துண்டை தலையில், முடி வடிவத்திலேயே கட்டிக்கொண்டிருந்தாள். அவளைத் தேடி, ஓர் இளம்பச்சைக் கம்பளமென விரிந்திருந்த அந்த மலைச்சரிவு உருளைத் தோட்டத்தில் இறங்கியிருந்தேன். தோட்டத்தின் கீழ் முனையில் யாருமில்லாப் பகுதியில் அவள் வேலை செய்துகொண்டிருப்பது தெரிந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!