புதிய குற்றவியல் சட்டங்களான பாரதிய நியாயன் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்க்ஷிய அதிநியம் ஆகிய மூன்று சட்டங்கள் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்திருக்கின்றன.
1860-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC), தற்போது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. 1973-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்று மாறியிருக்கிறது. 1872-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதிய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக இந்தப் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றுக்கான சட்ட மசோதாக்கள் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன. இந்தச் சட்டங்களுக்கு உட்பட்டு நாட்டின் முதல் வழக்கு குவாலியரிலும் தமிழகத்தின் முதல் வழக்கு சென்னையிலும் பதிவு செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இந்த பெயர் மாற்றத்தில் “பில்”ங்றது மட்டும் தான் புரியுது !!!!! பாவம் அதற்கு ஹிந்தி வார்த்தை இல்லை போல ??????