சிக்கல்களுக்கு அணை போடும் மறுமலர்ச்சி
அணைக்கட்டுப் பிரச்சினை ஒரு பக்கம் நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. எப்படியாவது பொருளாதாரத்தை மேம்படுத்த மக்கள் உதவியோடு எத்தியோப்பியா முயலுகிறது. இன்னொருபக்கம் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் பஞ்சத்தாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உணவுப் பற்றாக்குறையும், சுகாதாரமான உணவு கிடைக்காமலும் அல்லல் படுகிறார்கள்.
எத்தியோப்பியா அரசாங்கம் செய்த ஆய்வின் படி 16 மில்லியன் மக்களுக்கு உணவுக்கான உதவி தேவைப்படுகிறது. இவர்களில் பலர் டிக்ரே(Tigray) அமாரா(Amhara) பகுதிகளில் வசிப்பவர்கள். உள்நாட்டுப் போரால் வன்முறை தலைவிரித்தாடியது. மருத்துவமனைகள் சூறையாடப்பட்டன. மருந்தகங்கள் களவாடப்பட்டன. 10 இலட்சம் மக்களுக்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு ஓடினர்.
அமெரிக்காவின் பன்னாட்டு மருத்துவ வசதிகள், நிதி உதவிகள் USAID-இடம் இருந்து வரத் தொடங்கின. குழந்தைப் பேற்றுக்கான உதவியும் தொற்றுநோயைத் தடுக்கவும் உதவ இவ்வமைப்பு ஆரம்பித்தது. மாசு படிந்த நீர், அதனால் பரவும் நோய், சரிவர கவனிக்கப்படாத உடல்நலம், இறக்கும் குழந்தைகள் என ஒன்றன்பின் ஒன்றாகச் சங்கிலித் தொடராகப் பிரச்சினைகள். டிக் ரேவில் உள்நாட்டுப் போர் மூண்ட போது குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டன. இதனால் ஏற்கெனவே தடுப்புச் சக்தியில்லாத குழந்தைகள், இன்னும் பலவீனமடைந்து நோய்களை எதிர்க்க வலுவிழந்தனர்.
Add Comment