பத்தாவது முறையாக பீகார் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் நிதிஷ் குமார். பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் கடந்த இருபது ஆண்டுகளாக அம்மாநில முதல்வராக நிதிஷ் குமார்தான் இருந்து வருகிறார்.
இதற்கு முன்பு இந்தியாவில் ஏழு பேர் இருபதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். அவர்களுக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. இவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாமலேயே முதலமைச்சராக இருந்து வருகிறார். எத்தனையோ கூட்டணிகள். எதிலிருந்து எதற்கும் மாறுவார் நிதிஷ். அவ்வகையில் அவர் ஒரு பல்டி ஸ்பெஷலிஸ்ட்.
ஆனால் பீகார் மக்களுக்கு இவர் ‘இன்ஜினியர் பாபு’. பல்டி ஸ்பெஷலிஸ்ட் எனக் கிண்டல்களுக்கு உள்ளானாலும் இன்ஜினியர் பாபுவுக்கு மக்கள் ஆதரவு பெரும்பான்மையாக உள்ளது.














பீகாரும் ஒரு பல்டி ஸ்பெஷலிஸ்டும் கட்டுரையைப் படித்த போது
சிரிப்பாக இருந்தது. உண்மையில் நிதிஷ் யாருடன் கூட்டணி வைத்திருந்தார் என்பதை திரும்ப நினைவுக்குக் கொண்டு வருவது சிரமம். நிதிஷ்குமாருக்கே தடுமாறும் என்பதைப் படித்த போது
சிரிப்பாக இருந்தது. ஆனால் உண்மையை கட்டுரை இறுதியில்
சரியாக விளக்கியிருக்கிறது. மக்கள் கூட்டணியை ஆராய்த்தெல்லாம்
வாக்களிப்பதில்லை. தங்களுக்கு ஏதேனும் எந்த வழியிலாவது நன்மை கிடைத்திருக்கிறதா அதுவும் எந்த வழியிலாவது என்பதே உண்மை.