Home » கருத்து சொல்லும் பைத்தியங்கள்
நம் குரல்

கருத்து சொல்லும் பைத்தியங்கள்

மூன்று வாரங்கள் முன்பு, சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில் குழந்தை ஒன்று தவறி விழுந்துவிட்டது. குடியிருப்பில் இருந்தோர் ஒன்று கூடிக் குழந்தையை மீட்டனர். அந்த வீடியோ வைரலாகி, சமூக வலைத்தளங்களில் அந்தக் குழந்தையின் தாயைக் குறை சொல்லிப் பலர் கருத்துரைத்தார்கள். தற்போது அந்தக் குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மன உளைச்சல் காரணம்.

குழந்தை மீட்கப்பட்டு நலமுடன் இருக்கும்போது தாயைப் பொறுப்பற்றவராகச் சித்திரிக்க என்ன அவசியம் வந்தது? நம் யார் வீட்டிலும் குழந்தைகளுக்கு விபத்து ஏற்படுவதில்லையா? சோறூட்டும் போது வேண்டாம் என மறுத்து தாயின் பிடியில் இருந்து குழந்தை திமிறிக் குதிப்பதை யாரும் பார்த்ததே இல்லையா?

ஒரு நாள்கூட குழந்தைக்குச் சோறூட்டி, டயாபர் மாற்றிய அனுபவம் இல்லாதவர்கள் எல்லாம் குழந்தையை வளர்ப்பது எப்படி என்று வகுப்பெடுத்தனர். பெண்களை எப்படி வளர்க்க வேண்டும், பெண்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என விதவிதமான அறிவுரைகள். குழந்தை வளர்ப்பு அனுபவம் கொண்டோரும் கூட சேர்ந்து இதற்கு ஒத்து ஊதினர். அந்தப் பெண் உயிரை விட்ட பிறகும் இந்தக் கருத்துப் பைத்தியங்கள் திருந்தவில்லை. தற்கொலைச் செய்தியின் கீழேயும் வன்மக் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

குழந்தையை விட்டுப் போக எப்படித்தான் மனம் வந்ததோ? தாயின் தவறுக்குக் குழந்தைக்கு தண்டனையா? என்று இப்போதும் நீலிக் கண்ணீர் கருத்துகள். தவிர அந்த மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் சில புலனாய்வுப் புலிகள் கருத்து சொல்லியிருக்கிறார்கள். அடுத்து அந்தக் குழந்தையின் தந்தையையோ தாத்தா பாட்டியையோ பலி வாங்கக் கிளம்பிவிட்டார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!