ஒரு கோப்பை மகிழ்ச்சி
நூலகத்தின் கீழ்த் தளத்தில் ஒரு மூலையில் சிறிய மேஜை இருக்கும். அதன் மேல் இரண்டு பெரிய வெப்பக் குடுவைகளும் காகிதக் கோப்பைகளும் அடுக்கப்பட்டிருக்கும். வெள்ளைச் சட்டை, கையில்லாத கறுப்பு நிற அங்கி அணிந்த ஒருவர் அங்கு வருபவர்களுக்கு ‘காவா’ வழங்கிக் கொண்டிருப்பார். பால், சர்க்கரை ஏதுமற்ற இந்த அரபிக் காபியின் வாசனையும் கசப்புச் சுவையும் உடலுக்கும் மனத்துக்கும் புத்துணர்ச்சி தரும்.
அன்று நானும் காவா குடிக்கச் சென்றேன். பரிமாறுபவர் பொன்னிற வேலைப்பாடுகள் கொண்ட குடுவையை எடுத்து, மிகச் சிறிய காகிதக் கோப்பையில் சுடச்சுட காவாவை ஊற்றினார்.
அதைப் பருகத் தொடங்கியபோது, ‘மலையாளியானோ?’ என்று கேட்டார்.









Add Comment