Home » நூல்வெளி நாட்டினர் – 11
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 11

நான் ஒரு குர்த்

நூலகத்தின் பின்புறம் இருக்கும் புல்வெளியில் அவ்வப்போது சில கலை நிகழ்வுகள் நடப்பதுண்டு. ஒரு மாலை வேளையில் அது போன்றதொரு நிகழ்வில் தற்காலிகமாக இரண்டு சிறிய உணவகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு கடையில் காபி மணம் காற்றில் மிதக்க, அதை விடவும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பக்லவாக்களின் வாசனை என்னைச் சுண்டி இழுத்தது. நெய்யில் குளித்து, பொன்னிறமாய் மின்னிய அந்த பக்லவாக்களின் மேல் பச்சை நிறப் பிஸ்தா பருப்புகள் தூவப்பட்டிருந்தன. பார்ப்பதற்கு ஒரு கலைப் படைப்பு போல இருந்த அந்த இனிப்புகள் நாவில் எச்சிலை ஊற வைத்தன.

அங்கு நின்றிருந்த ஓர் இளைஞன் என்னிடம் ஒரு துண்டு பக்லவாவை நீட்டி, ‘இதைச் சுவைத்துப் பாருங்கள்’ என்றான். அவன் பெயர் அய்லான். மிக நேர்த்தியான உடை, கனிவான பேச்சு என ஒரு தேர்ந்த விற்பனையாளனைப் போலத் தெரிந்தான்.

‘துருக்கியோட பக்லவாவை அடிச்சிக்க உலகத்துல வேற இனிப்பே இல்லை’ என்று எனக்குப் பிடித்த அந்த இனிப்பை வாங்கியபடி சொன்னேன். அவன் முகம் உற்சாகத்தில் மலர்ந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!