Home » திசையெலாம் தமிழர் – 10
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 10

நவநீதம் பிள்ளை

2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. ‘இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்திருக்கின்றன. அது குறித்து உள்நாட்டில் நடக்கும் விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் எந்தப் பயனும் இல்லை. எனவே சர்வதேச அளவில் சுதந்தரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.’

ஐநாவில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் விளைவாக, சர்வதேச விசாரணை அமைப்பொன்று உருவாக்கப்பட்டது. இந்த அறிக்கையைச் சமர்ப்பித்தவர் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கர் நவி பிள்ளை. இலங்கையில் நடந்தது போர்க் குற்றம்தான் என்பது உலக நாடுகளுக்கு ஏற்கெனவே தெரியுமென்றாலும், சம்பிரதாயமான இந்த அறிக்கைகளும் சுதந்தரமான விசாரணை அமைப்புகளும் அவசியமாக இருந்தன.

போர் முடிவுக்கு வந்த பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதும் ராணுவக் குடியிருப்புகள் அதிகமாவதும் தமிழர்களின் கலாசார அடையாளங்களை அழிக்கும் முயற்சி என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் நவி பிள்ளை. வெள்ளைக் கொடியேந்திச் சரணடைய வந்தவர்களைக் கொலை செய்தது, பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போனது ஆகியவற்றைக் குறித்து இலங்கை அரசு பதிலளிக்க வேண்டுமென அறிவுறுத்தியது அந்த அறிக்கை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!