Home » திசையெலாம் தமிழர் – 11
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 11

ராமசாமி பழனிசாமி

தமிழ்நாட்டிலிருந்து தோட்ட வேலைக்காக 1920களில் மலேசியாவுக்குக் குடிபெயர்ந்தனர் பினாங்கு ராமசாமி என்று அறியப்படும் ராமசாமி பழனிச்சாமியின் பெற்றோர். ஆயிரக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அந்தக் காலகட்டத்தில் மலேசியாவுக்கு இடம்பெயர்ந்தனர். மலேசியாவின் பினாங்கு மாகாணத்துக்குத்தான் அவர்கள் முதலில் சென்றனர். அதன்பிறகு கோலாலம்பூர், சித்தியவான் போன்ற நகரங்களுக்கும் பணி நிமித்தமாக இடம் பெயர்ந்தனர்.

மலேசியாவின் இரண்டாவது பெரிய மாநிலமான பேராக்கில் சித்தியவான் என்ற நகரத்தில் 1949ஆம் ஆண்டு ராமசாமி பழனிச்சாமி பிறந்தார். சித்தியவான் இதற்கு முன் பினாங்கு மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

மிகச்சிறு வயதில் சீனப் பள்ளியிலும் தமிழ்ப் பள்ளியிலும் பயின்றார். அதற்குப் பிறகு சித்தியவானில் உள்ள ஏசிஎஸ் பள்ளியில் ஆரம்பப் பள்ளிக்கல்வியைத் தொடர்ந்தார். ராமசாமியுடைய சகோதரிக்குத் திருமணமானவுடன் அவரோடு இணைந்து பல இடங்களுக்கு இடம்பெயர நேர்ந்தது. ஜோஹர் பாஹ்ருவில் உள்ள ஆங்கிலக் கல்லூரி எனப் புகழ்பெற்ற மக்தாப் சுல்தான் அபு பக்கர் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!