13.2 பில்லியன் இலங்கை ரூபா பணம் திருடப்பட்டிருக்கிறது. யாருடைய வங்கிக் கணக்கிலாவது பணம் திருட்டுப் போய் விட்டதா? அல்லது அரசியல்வாதிகள் யாராவது ஊழல் செய்திருக்கிறார்களா? அதுவும் இல்லை என்றால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் மோசடி நடந்திருக்கிறதா? எதுவுமே இல்லை.
இலங்கையின் NDB வங்கி ஏப்ரல் 2ஆம் திகதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ‘சுமார் 380 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மோசடி எங்கள் வங்கியில் நடந்திருக்கிறது. ஆய்வு செய்து வருகிறோம். உண்மையான பெறுமதி, மதிப்பிட்டதை விட அதிகம் இருக்கலாம்.’
இந்த அறிவிப்பைப் பொதுமக்களில் பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் இந்த மாதிரியான சம்பவங்களைப் பங்குச் சந்தைக்குச் சொல்லிவிட வேண்டும். அதற்காக வெளியிடப்பட்ட சம்பிரதாயபூர்வமான அறிக்கையில்தான் 380 மில்லியன் இலங்கை ரூபா NDB வங்கியில் மோசடி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.















Add Comment